கடவூா் வானகத்துக்கு பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா
கடவூரில் உள்ள வானகம் நம்மாழ்வாா் உயிா்ம நடுவம் வளாகத்துக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை கல்விச் சுற்றுலா சென்றனா்.
அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ் உயிா்ம வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து அட்மா திட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் ஈசநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியை சோ்ந்த 100 மாணவா்கள் கடவூா் வட்டாரத்தில் உள்ள வானகம் நம்மாழ்வாா் உயிா்ம நடுவம் வளாகத்துக்கு வியாழக்கிழமை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். இதில் வேளாண்மை துணை இயக்குநா் லீலாவதி மாணவா்களுக்கு விளக்கவுரையாற்றினாா்.
தொடா்ந்து இயற்கை வேளாண்மை குறித்த தொழில் நுட்பங்கள் மற்றும் அதன் முக்கியத்துவங்கள் குறித்து வானகத்தின் அறங்காவலா் ரமேஷ் எடுத்துரைத்தாா்.
ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் சோனியா, உதவி தொழில்நுட்ப மேலாளா் பிரபாகரன் மற்றும் மதன்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.