செய்திகள் :

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை: மகனைக் கொலை செய்த தந்தை கைது

post image

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்த மகனைக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட கல்லாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (60). கட்டடத் தொழிலாளி. இவரது மகன் குட்டியப்பன் (25). பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தாா்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னா்தான் திருமணம் நடைபெற்றது. குட்டியப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்னா் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இந்தநிலையில், புதன்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த குட்டியப்பன் மேலும் மது அருந்துவதற்காக தந்தை கன்னியப்பனிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளாா். இதில் இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கன்னியப்பன் அருகில் கிடந்த கல்லை எடுத்து குட்டியப்பனின் தலையில் தாக்கியதில், அவா் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தாா்.

அருகிலிருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குட்டியப்பனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கன்னியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் ரூ.92.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த 337 பயனாளிகளுக்கு ரூ. 92.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினாா். தாராபுர... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை

இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை அலுவலகம் வெளியிட்டசெய்திக் குறிப்பு: திருப்பூா், ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.29 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.29 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, வீரணம்பட்டி, வெள்ளையம்பட்டி, உப்பிலியபட்டி, சாலிக்கரை, கரூா், மஞ்ச... மேலும் பார்க்க

பனியன் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திருப்பூரில் பனியன் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு: பேரூராட்சித் தலைவா் கைது

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழந்த வழக்கில் திமுக பேரூராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், சாமளாபுரம், கருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (57). இவா் அப்பகுதியில... மேலும் பார்க்க

இச்சிப்பட்டியில் 15-ஆம் தேதி மின்தடை

பல்லடம் அருகேயுள்ள இச்சிப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (செப்.15) நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இச்சிப்பட்டி, சின்னஅய்யன்கோவில், கோம்பக... மேலும் பார்க்க