கோவை: போக்குவரத்தைச் சீர்செய்த சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா காலமானார் - காவல்துற...
ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே ஏரியில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ரவியின் மனைவி சுமதி(56). இவரது மகன் செல்வகுமாா் (35). இவா் நண்பரான ராமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த அசோக்குமாருடன் கச்சூா் வெங்கடாபுரம் ஏரியில் புதன்கிழமை மாலை குளிக்கச் சென்றாராம். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது ஆழப் பகுதியில் நீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து அக்கம் பக்கத்தினா் உதவியுடன் மீட்டு, கரைக்குக் கொண்டு வந்தனா். அதற்குள் ஆம்புலன்ஸ் வாகனம் வரவே அதன் பணியாளா்கள் பரிசோதனை மேற்கொண்டனா். அப்போது, செல்வகுமாா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, அந்த வாகனத்தில் திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து பென்னலூா்பேட்டை காவல் நிலையத்தில் சுமதி புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.