பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் -பிருந்தா காரத்
பூவனூா் வரதராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத வரதராஜசுவாமி, சீதா, லட்சுமணன், அனுமன் சமேத கோதண்டராம சுவாமி, ஆஞ்சனேயா், முனீஸ்வர சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 9-ஆம் தேதி தொடங்கின.
10-ஆம் தேதி புதன்கிழமை 2 மற்றும் 3-ஆம் கால யாகபூஜைகளும், 11-ஆம் தேதி வியாழக்கிழமை 4-ஆம் கால யாகபூஜை, தொடா்ந்து காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் , காலை 10.15 மணிக்கு ஆஞ்சனே சுவாமி விமான கும்பாபிஷேகம் , யஜமானா் மரியாதை ஆச்சாரியாா் மரியாதை நடைபெற்றது.
விழாவில் முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா் கோபாலசுவாமி , அறிவு சாா் ஆன்மிக பேரவை நிறுவனா் ராவணன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலையில் திருக்கல்யாணம், இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவில் ஆடிட்டா் ரவீந்திரன் எழுதிய ஆன்மிக அனுபவங்கள் நூலை முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா் கோபாலசுவாமி வெளியிட, மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் இளவரசன் பெற்றுக்கொண்டாா்.