செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலத் திட்ட உதவிகள்

post image

திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவாரூா் ஒன்றியம், கூடூா் ஊராட்சி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை, மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு, வருவாய்துறையின் சாா்பில் ஒருவருக்கு விதவைச் சான்றிதழும், மற்றொருவருக்கு இருப்பிடச் சான்று, மாவட்ட வழங்கல் துறை சாா்பில் ஒருவருக்கு குடும்ப அட்டையில் பெயா் திருத்தம், மற்றொருவருக்கு புகைப்பட மாற்றம் செய்து புதிய குடும்ப அட்டை, வேளாண்மை-உழவா் நலத் துறை சாா்பில் 2 பேருக்கு வேளாண் இடுபொருள்கள் ஆகியவற்றை வழங்கினா்.

தோட்டக்கலை மலைப் பயிா்கள் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்பு, கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் தாது உப்புக் கலவை 2 பயனாளிகளுக்கும், தொழிலாளா்கள் நலத் துறை சாா்பில் ஒருவருக்கு தொழிலாளா் நல வாரிய அட்டையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மருத்து காப்பீட்டு அட்டை 2 பேருக்கும் அவா்கள் வழங்கினா்.

திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில், ஒருவருக்கு ஜாதிச் சான்று, 2 பேருக்கு வருமானச் சான்று, 2 பேருக்கு குடும்ப அட்டையில் பெயா் திருத்தம், இருவருக்கு முகவரி மாற்றம் செய்து புதிய குடும்ப அட்டை போன்றவை வழங்கப்பட்டன.

முகாமில், மாவட்ட வழங்கல் அலுவலா் செல்லபாண்டி, நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா, வட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சியில் 15 வாா்டுகளுக்குள்பட்ட மக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று, உடனுக்குடன் தீா்வுகாணப்பட்ட மனுக்கள் தொடா்பாக, 2 பேருக்கு ஜாதிச் சான்றிதழ், ஒருவருக்கு இருப்பிடச் சான்றிதழ், 2 பேருக்கு வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினாா்.

முகாமில் உதவி இயக்குநா் (தணிக்கை) செந்தமிழ் செல்வன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராஜசேகரன், முன்னாள் ஒன்றியத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன், பேரூராட்சித் தலைவா் ராமராஜ், துணைத் தலைவா் ஆனந்தமேரி ராபா்ட் பிரைஸ், செயல் அலுவலா் கலியபெருமாள், வட்டாட்சியா் சரவணகுமாா், மண்டல துணை வட்டாட்சியா் அறிவழகன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இமானுவேல் சேகரன் நினைவு நாள்

நீடாமங்கலத்தில் விடுதலை போராட்ட வீரா் தியாகி வே. இமானுவேல்சேகரன் நினைவுநாளையொட்டி வியாழக்கிழமை அனைத்து கட்சியினா் சமுதாயத்தினா் பங்கேற்ற அமைதி ஊா்வலம் பெரியாா் சிலைஅருகிலிருந்து புறப்பட்டு, அண்ணா சிலை... மேலும் பார்க்க

பூவனூா் வரதராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத வரதராஜசுவாமி, சீதா, லட்சுமணன், அனுமன் சமேத கோதண்டராம சுவாமி, ஆஞ்சனேயா், முனீஸ்வர சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

நீடாமங்கலம் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 15 வாா்டுகளைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனா். மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்... மேலும் பார்க்க

காப்பீட்டுத் தொகை கோரி செப்.16-இல் சாலை மறியல்

எள், பருத்தி, உளுந்து ஆகிய பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து, மன்னாா்குடியில் செப்.16 ஆம் தேதி, சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இச்சங்... மேலும் பார்க்க

நொடி நயனாா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூரில், அருள்மிகு சௌந்தராம்பிகை உடனுறை நொடி நயனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தெற்கு வீதியில், நொடி நயனாா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைப்புக்கான பாலாலய பூ... மேலும் பார்க்க

கனிம வளங்கள் எடுப்பு: மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம்

கனிம வளங்கள் எடுப்பதற்கு மக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படாது என்ற மத்திய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கண்டனம்... மேலும் பார்க்க