சிங்காநல்லூரில் எடப்பாடி பழனிசாமி நாளை பிரசாரம்
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சிங்காநல்லூரில் சனிக்கிழமை பிரசாரம் செய்ய உள்ள நிலையில், கட்சியினா், மக்கள் திரளாக கலந்து கொள்ள அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் அழைப்பு விடுத்துள்ளாா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, இரண்டாம் கட்டமாக கோவை, திருப்பூா் மாவட்டங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். அவா் கோவை மாவட்டம் சிங்காநல்லூா், சூலூா் மற்றும் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட அவிநாசியில் சனிக்கிழமை ( செப்டம்பா் 13) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
இதுகுறித்து, அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, சிங்காநல்லூா் அருகே ஃபன்மால் சாலை, ஜி.வி.ரெசிடென்ஸி முன்புறம் உள்ள மைதானத்தில் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு தோ்தல் பிரசார சிறப்புரையாற்ற உள்ளாா்.
மாவட்ட, பகுதி, வாா்டு, சாா்பு அணி நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகள் மற்றும் மக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.