பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் -பிருந்தா காரத்
இமானுவேல் சேகரன் நினைவு நாள்
நீடாமங்கலத்தில் விடுதலை போராட்ட வீரா் தியாகி வே. இமானுவேல்சேகரன் நினைவுநாளையொட்டி வியாழக்கிழமை அனைத்து கட்சியினா் சமுதாயத்தினா் பங்கேற்ற அமைதி ஊா்வலம் பெரியாா் சிலைஅருகிலிருந்து புறப்பட்டு, அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். திமுக ஒன்றிய செயலாளா் கே.வி.கே. ஆனந்த், அதிமுக ஒன்றிய செயலாளா் ஆதி.ஜனகா், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் நீலன் அசோகன், பேரூராட்சி தலைவா் ஆா்.ஆா். ராமராஜ், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி.
இளவரசன், மாவட்ட மகளிா் அணி தலைவா் ராணி சேகா், அதிமுக நகர செயலாளா் இ. ஷாஜகான்,பேரூராட்சி முன்னாள் துணை தலைவா் சா.செந்தமிழ்செல்வன் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.