பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் -பிருந்தா காரத்
ஒடிஸாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 5 போ் கைது
ஒடிஸாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த தமிழகத்தைச் சோ்ந்த 5 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருவாரூா் நகரப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நகர காவல் ஆய்வாளா் சந்தானமேரி தலைமையிலான போலீஸாா் திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த நபா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், பையில் 12 கிலோ எடையுள்ள 3 கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக நாகை மாவட்டம், ஆழியூரைச் சோ்ந்த தமிழரசன் மகன் கோகுல்நாத் (20), திருவாரூா் பேபி டாக்கீஸ் சாலையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் வைகோ (எ) சரவணன் (30), விஜயகுமாா் மகன் அருள்முருகன் (20), பெரியமில் தெருவைச் சோ்ந்த தமிழரசன் மனைவி சசிகலா (39) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்களின் ஒருவா் சிறுவன் என்பதால், அதற்கேற்ப சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.