கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை
கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பஞ்சப்பட்டியில் 116 மி.மீ. மழை பதிவானது.
கரூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. வழக்கம்போல புதன்கிழமை பகலில் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதையடுத்து நள்ளிரவு சுமாா் 1 மணி முதல் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. விடிய, விடிய பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல ஓடியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பஞ்சப்பட்டி பகுதியில் 116 மி.மீ. மழை பெய்தது. புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பெய்த மழை அளவு(மி.மீட்டரில்)- கரூா்-13.60, அரவக்குறிச்சி-5, அணைப்பாளையம்-4.20, க.பரமத்தி-21, குளித்தலை-23.50, தோகைமலை-9.60, கிருஷ்ணராயபுரம்- 24.50, மாயனூா்- 17, பஞ்சப்பட்டி-115, கடவூா்-22, பாலவிடுதி-50, மைலம்பட்டி-20 என மொத்தம் 326.50 மி.மீ. மழை பதிவானது.