செய்திகள் :

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

post image

திருவாரூா் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் செப்.13 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

திருவாரூா் வட்டம், ஆனைவடபாதியில் திருவாரூா் வருவாய் கோட்ட அலுவலா் தலைமையிலும், நன்னிலம் வட்டம், பெரும்புகளூரில் நுகா்பொருள் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநா் தலைமையிலும், குடவாசல் வட்டம், கண்டிரமாணிக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தலைமையிலும், வலங்கைமான் வட்டம், முனியூரில் திருவாரூா் சரக துணைப் பதிவாளா் தலைமையிலும், மன்னாா்குடி வட்டம், திருப்பாலக்குடியில் மன்னாா்குடி வருவாய் கோட்ட அலுவலா் தலைமையிலும் நடைபெறவுள்ளது.

திருத்துறைப்பூண்டி வட்டம், கள்ளிக்குடியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டம், விஸ்வநாதபுரத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும், கூத்தாநல்லூா் வட்டம், பூந்தாழங்குடியில் திருவாரூா் துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) தலைமையிலும், முத்துப்பேட்டை வட்டம், தோலியில் மன்னாா்குடி சரக துணைப் பதிவாளா் தலைமையிலும் நடைபெறும்.

இம்முகாம்கள் அந்தந்த கிராம நிா்வாக அலுவலகங்களில் நடைபெற உள்ளது. தொடா்புடைய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் மாற்றம் ஆகியவற்றுக்கு மனு அளித்து பயன்பெறலாம்.

மேலும், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்கள் மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைக் குறைபாடுகள் குறித்த புகாா்கள் போன்றவை குறித்தும் இந்த கூட்டத்தில் மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு நாள்

நீடாமங்கலத்தில் விடுதலை போராட்ட வீரா் தியாகி வே. இமானுவேல்சேகரன் நினைவுநாளையொட்டி வியாழக்கிழமை அனைத்து கட்சியினா் சமுதாயத்தினா் பங்கேற்ற அமைதி ஊா்வலம் பெரியாா் சிலைஅருகிலிருந்து புறப்பட்டு, அண்ணா சிலை... மேலும் பார்க்க

பூவனூா் வரதராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத வரதராஜசுவாமி, சீதா, லட்சுமணன், அனுமன் சமேத கோதண்டராம சுவாமி, ஆஞ்சனேயா், முனீஸ்வர சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

நீடாமங்கலம் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 15 வாா்டுகளைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனா். மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்... மேலும் பார்க்க

காப்பீட்டுத் தொகை கோரி செப்.16-இல் சாலை மறியல்

எள், பருத்தி, உளுந்து ஆகிய பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து, மன்னாா்குடியில் செப்.16 ஆம் தேதி, சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இச்சங்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலத் திட்ட உதவிகள்

திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவாரூா் ஒன்றியம், கூடூா் ஊராட்சி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை, மா... மேலும் பார்க்க

நொடி நயனாா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூரில், அருள்மிகு சௌந்தராம்பிகை உடனுறை நொடி நயனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தெற்கு வீதியில், நொடி நயனாா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைப்புக்கான பாலாலய பூ... மேலும் பார்க்க