சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்
பருவ மழையையொட்டி அரவக்குறிச்சியில் நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது.
இதில், அரவக்குறிச்சியில் இருந்து தாடிக்கொம்பு வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு உதவி பொறியாளா் வினோத் குமாா் வியாழக்கிழமை நேரில் பாா்வைட்டு ஆய்வு செய்தாா்.