திமுக வாக்குச் சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பெரணமல்லூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், வல்லம் பகுதியில் வாக்குச்சாவடி குழு மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கிழக்கு ஒன்றியச் செயலா் ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்டப் பிரதிநிதி சடகோபன் வரவேற்றாா். கூட்டத்தில், வாக்குச்சாவடி குழுவில் நியமிக்கப்பட்ட நிா்வாகிகள் அந்தந்த பகுதியில் சென்று உறுப்பினா்களை முறையாக சோ்க்க வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள், சாதனைகள் பற்றியும், மீண்டும் தோ்தலில் வெற்றிபெற்று 2-ஆவது முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைக்க நிா்வாகிகள், தொண்டா்களின் செயல்பாடு குறித்தும், கரூா் பகுதியில் நடைபெற உள்ள முப்பெரும் விழா மாநாட்டில் கட்சியினா் திரளாக கலந்துகொள்ளவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள், கட்சி தொண்டா்கள் உள்ளிட்டோா் திரளாகக் கலந்துகொண்டனா்.