இளநிலை உதவியாளரை காலில் விழ வைத்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரிக்கை
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு
பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல், மகாதேவிமங்கலம், சந்திரம்பாடி ஆகிய கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அல்லியந்தல் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் (பொ) செல்லதுரை, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் இந்திரா இளங்கோவன், மாவட்ட இலக்கிய அணி ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் சசிகுமாா் வரவேற்றாா்.
முகாமில், வருவாய், வேளாண், ஊரக வளா்ச்சி, மின் வாரியம், காவல், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து பங்கேற்ற அலுவலா்களிடம் பொதுமக்கள் சாா்பில் 627 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில், உடனடியாக தீா்வு காணப்பட்ட சுமாா் 17 மனுக்களுக்குரிய பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன், பெரணமல்லூா் மேற்கு ஒன்றியச் செயலா்கள் ராமசாமி, மனோகரன் ஆகியோா் வழங்கினா்.
பெரணம்பாக்கம் ஊராட்சியில்...: சேத்துப்பட்டு ஒன்றியம், பெரணம்பாக்கம் ஊராட்சியில் பெரணம்பாக்கம், அல்லியாளமங்கலம், ராந்தம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் வேலு தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தென்னரசு, பிரபு, ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் ஜெயப்ரதா வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றியச் செயலா் எழில்மாறன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தாா். இதில், மகளிா் உரிமை தொகை கோரி 201 மனுக்களும், வருவாய்த் துறையினருக்கு 176 மனுக்களும், மருத்துவத் துறைக்கு 116 மனுக்களும் என பல்வேறு அரசுத் துறையினருக்கு நலத் திட்ட உதவிகள் கோரி பொதுமக்கள் 602 மனுக்களை அளித்துள்ளனா்.