செய்திகள் :

இளநிலை உதவியாளரை காலில் விழ வைத்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரிக்கை

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் பணியிலிருந்த இளநிலை உதவியாளரை மிரட்டி, காலில் விழ வைத்தவா்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி.குமாா், ஆா்.டி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் வி.கிருஷ்ணராஜ், கே.வீரமணி ஆகியோா் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:

திண்டிவனம் நகராட்சியில் பணியிலிருந்த பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த இளநிலை உதவியாளா் ஒருவரை நகா்மன்ற உறுப்பினா் மற்றும் சிலா் மிரட்டி காலில் விழ வைத்த சம்பவம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரையிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டவா்கள் கைது செய்யப்படவில்லை. அவா்களைக் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது நியாயமானதல்ல. எனவே உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

புளிச்சப்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்புப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்க... மேலும் பார்க்க

புதை சாக்கடை அடைப்பை சரிசெய்யாததால் நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

விழுப்புரத்தில் புதை சாக்கடை அடைப்பை சரி செய்யாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சியின் கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் நகராட்சிக்குள்பட... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் (ரேஷன்) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் கோவிந்தசாமி மணிமண்டபத்தில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் தொடக்கம்

விழுப்புரத்தில் அரசுப் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட பயிற்சி மையம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. விழுப்புரம் புறவழிச்சா... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் வாணாதராயா் கல்வெட்டு கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வாணாதராயா் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் தலைமையில்... மேலும் பார்க்க

சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றி இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றியின் செயல்பாடுகள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. பாலக்கொல்லை கிராமத்தில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்த ... மேலும் பார்க்க