செய்திகள் :

சென்னையில் 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

post image

சென்னையில் பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளருக்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேற்று நகரங்களில் இயங்கி வரும் ஜவுளிக்கடையின் உரிமையாள வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளரின் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் என அவருக்கு தொடர்புடைய 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் 40 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கமாக காவல்துறை அல்லது துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்படும் நிலையில், எவ்வித பாதுகாப்பும் இன்றி சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

முன்னதாக, சென்னை வடபழனி, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல், இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையில் 5 -க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Income Tax Department raids 20 places in Chennai

இதையும் படிக்க : போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்

ரூ. 82,000 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 81,920 -க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த செப். 1-இல் சவரன் தங்கம் ரூ.77,640- க்கு வ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 119.60 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,717 கன அடியிலிருந்து வினாடிக்கு 13862 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.அணையில் இருந்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறல்: அரசுக்கு உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது, அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸாா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

டெட் தோ்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் ... மேலும் பார்க்க

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு - பிகாா் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் வரும் செப்.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். முன்னதாக பிகாா் மாநிலம் ஜோக்பானியில் இருந்து வருகிற செப்.15-ஆம் த... மேலும் பார்க்க