செய்திகள் :

சார்லி கிர்க் உடலைச் சுமந்துசென்ற துணை அதிபர்!

post image

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க்கின் உடலை துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சுமந்துசென்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர், பழமைவாத கொள்கையாளர் என அறியப்படும் சார்லி கிர்க், உடா மாகாண பல்கலை.யில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரின் கொலைக்கு அமெரிக்காவின் அரசியல் கட்சியினர் அனைவரும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். கொலையாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உடா மாகாணத்தில் இருந்து அரிஸோனா மாகாணத்துக்கு சார்லி கிர்க்கின் உடலை துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் விமானம் மூலம் வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது, அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சார்லி கிர்க்கின் உடலை பாதுகாப்புப் படை வீரர்களுடன் ஜே.டி. வான்ஸும் சுமந்துசென்றார்.

இதேபோல், அரிஸோனாவில் விமானத்தில் இருந்து இறங்கும் போது, சார்லி கிர்க்கின் மனைவி எரிக்காவுடன் துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸ் வந்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முன்னதாக, சார்லி கிர்க்கின் கொலை குறிப்பிட்டு இது அமெரிக்காவின் இருண்ட காலம் என விமர்சித்த டிரம்ப், அந்நாட்டின் உயரிய ’மெடல் ஆஃப் ஃபிரீடம்’ விருதை சார்லிக்கு வழங்குவதாக அறிவித்தார்.

சார்லி கிர்க், ஜே.டி. வான்ஸின் நீண்ட கால நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

The vice president carrying Charlie Kirk's body

இதையும் படிக்க : அமெரிக்காவின் இருண்ட காலம்: சார்லி கிர்க் கொலை பற்றி டிரம்ப்

குடும்பத்தினர் கண் முன் இந்திய வம்சாவளி நபரின் தலை துண்டிப்பு! கொலையாளி கைது

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், மனைவி மற்றும் மகன் கண் முன்னே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரின் தலையைத் துண்டித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்

போலந்து எல்லைக்குள் ரஷியாவின் ட்ரோன்கள் நுழைந்த சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடி... மேலும் பார்க்க

அரசினா் மாளிகையில் இருந்து வெளியேறும் மகிந்த ராஜபட்ச

இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச வசித்துவரும் அரசினா் மாளிகையில் இருந்து அவா்... மேலும் பார்க்க

மீண்டும் நிதா்சனத்தை நிரூபித்த கத்தாா் தாக்குதல்

கத்தாரில் அமெரிக்காவின் புதிய போா் நிறுத்த பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவா்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், தலைவா்களை படுகொலை செய்வதன் மூலம் அந்த பயங்கரவ... மேலும் பார்க்க

சீனா்களுக்கு நாசா தடை

சீனாவைச் சோ்ந்தவா்களை பணியமா்த்துவதற்கு அமெரிக்க விண்வெளித் ஆய்வு நாசா தடை விதித்துள்ளது.இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா்களாக இருந்து, அமெரிக்க விசா வைத்திருந்தாலும் அவா்கள் தங்களத... மேலும் பார்க்க

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை: அமெரிக்க தூதராகப் பதவியேற்கவுள்ள சொ்ஜியோ கோா்

‘இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை’ என இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்கவுள்ள சொ்ஜியோ கோா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அவா... மேலும் பார்க்க