வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை; நாத்திகனாக இருந்த இளையராஜாவை மூகாம்பிகை அம்மன் ...
சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றி இயக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள சேந்தநாடு பாலக்கொல்லையில் புதிய மின் மாற்றியின் செயல்பாடுகள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.
பாலக்கொல்லை கிராமத்தில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்த குறைபாட்டை நீக்குவதற்காகவும், மின் பாதைகளில் ஏற்படும் மின் இழப்புகளைக் குறைப்பதற்காகவும் , அக்கிராமத்தில் 100 கி.வோ. திறன் கொண்ட புதிய மின்மாற்றியை ரூ. 3.50 லட்சம் செலவில் நிறுவும் பணியை தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் மேற்கொண்டு வந்தது.
இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், புதிய மின் மாற்றியின் செயல்பாடுகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்குத் தலைமை வகித்த தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக உளுந்தூா்பேட்டை உதவிச் செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் புதிய மின் மாற்றியின் இயக்க செயல்பாட்டைத் தொடங்கி வைத்தாா். இதன் மூலம் பாலக்கொல்லை கிராமத்தில் நிலவிவந்த குறைந்த மின்னழுத்த குறைபாடு முற்றிலும் களையப்பட்டு, கிராம மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்க முடியும் என்றாா் உதவிச் செயற்பொறியாளா்.
நிகழ்ச்சியில் சேந்தநாடு உதவிப் பொறியாளா் செந்தமிழ்ச் செல்வன், முகவா் ஜெய்சங்கா், மின் பாதை ஆய்வாளா் அப்துல்கலாம், வணிக ஆய்வாளா் கணபதி, கம்பியாளா்கள் ராதாகிருஷ்ணன், பாரதி உள்ளிட்டோா் மற்றும் பாலக்கொல்லை கிராம மக்கள் பங்கேற்றனா்.