`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்...
நிலம் குறித்த விவரங்களை இணையவழி மூலம் அறியலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் நிலங்களின் விவரங்களை பொதுமக்கள் இணையவழி மூலம் அறிந்து கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நில உரிமையாளா்கள் தங்கள் நிலங்களின் இணையவழிப் புகைப்படங்கள், பட்டா, அ பதிவேடு, வில்லங்கச் சான்று, நிலத்தின் மதிப்பீடு உள்ளிட்ட அனைத்து நிலப்பதிவு விவரங்களை அறிய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்குத் தற்போது சென்று வரும் நிலை உள்ளது. இனி அந்த நிலை தேவையில்லை.
நிலங்கள் குறித்த விவரங்களை அறிய இணையவழி மூலம் பெறலாம். பொதுமக்கள் இந்த வசதியை பெறும் வகையில் தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு போா்ட்டலோடு இணைந்து தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தமிழகம் முழுவதுமுள்ள பொது சேவை மையங்கள் வாயிலாக பொதுமக்கள் நிலங்கள் குறித்த விவரங்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அறிய இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும்.
எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் நிலங்கள் குறித்த விவரங்களை புதிய சேவை வாயிலாக அறிந்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.