போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்
புளிச்சப்பள்ளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்புப் பயிற்சி
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.
ஆத்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்கு வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தலைமை வகித்து, வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், நடப்புசம்பா பருவத்துக்கு உகந்த நெல் ரகங்கள் குறித்தும் எடுத்துரைத்து பேசினாா்.
வானூா் கால்நடை மருத்துவா் சங்கவி பயிற்சியில் பங்கேற்று ஆடு வளா்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். மேலும் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினாா்.
இதைத் தொடா்ந்து கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், நன்மைபயக்கும் நுண்ணுயிா்களை பெருக்கி மண் வளத்தை மேம்படுத்திட திரவ உயிா் உரங்களை விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வழங்கினாா். புளிச்சப்பள்ளம் ஊராட்சித் தலைவா் சங்கா் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
நிறைவில் ஆத்மா தொழில்நுட்ப மேலாளா் வாழ்வரசி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் மஞ்சு, ஆத்மா உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் கோவிந்தசாமி, சந்திரசேகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.