செய்திகள் :

வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை; நாத்திகனாக இருந்த இளையராஜாவை மூகாம்பிகை அம்மன் ஆட்கொண்ட கதை!

post image

இளையஞானி இளையராஜா சினிமா இசை உலகிற்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. இதை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் வருகிற 13-ந்தேதி இளையராஜா பொன்விழா கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் இளையராஜா நேற்று உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்குச் சென்றிருக்கிறார்.

மூகாம்பிகை அம்மனை தரிசனம் செய்த இளையராஜா வைர கிரீடத்தையும், தங்க வாளையும் காணிக்கையாக வழங்கியிருக்கிறார்.

இதன் மதிப்பு மொத்தம் சுமார் ரூ.8 கோடி என்று கூறப்படுகிறது. இது முதல்முறையல்ல இதற்கு முன் வைரம் பதித்த ஹஸ்தாவை காணிக்கையாகக் கொடுத்திருக்கிறார்.

இதுபோல பலமுறை மூகாம்பிகையை தரிசனம் செய்து காணிக்கையாகக் கொடுத்திருக்கிறார்.

இளையராஜாவின் வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை

இதையடுத்து , செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, "நான் அம்மனுக்கு காணிக்கை கொடுக்கவில்லை, எல்லாம் அம்மன் தந்ததுதான். அதைத் திருப்பிக் கொடுக்கிறேன், அவ்வளவுதான். என்னுடையது என்று ஏதுமில்லை." என்று பக்தியுடன் பேசியிருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் இளையராஜா, தன் அண்ணனுடன் சேர்ந்து நிறைய கம்யூனிச சித்தாந்தம் சார்ந்த கச்சேரிகளை நடத்தியவர். அப்போது நிறைய கம்யூனிச பிரசார பாடல்களுக்கு ஆர்மோனியம் வாசித்திருக்கிறார் இளையராஜா.

கம்யூனிசம் சார்ந்த அரசியல் கச்சேரிகளில் நிறைய இசை வாசித்ததால் இளையராஜாவிற்கும் அந்த அரசியல் தாக்கம் இருந்தது. அதனால் கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் இருந்திருக்கிறார்.

மூகாம்பிகை அம்மன்

இசையை முழுமையாகக் கற்றுக்கொள்ள சென்னை வந்து ஜி.கே.வெங்கடேஷ் போன்ற அதீத ஆன்மிக நம்பிக்கை கொண்டவருடன் பணியாற்றியும் கடவுள் பற்றியெல்லாம் இளையராஜா அதிகம் யோசித்ததில்லை.

1974ஆம் ஆண்டு சினிமா பாடல் இசை கச்சேரிக்காக ஜி.கே.வெங்கடேஷிடம் மைசூர் சென்றிருக்கிறார் இளையராஜா. கச்சேரியை முடித்துவிட்டு பெங்களூரை சுற்றிப் பார்க்க இசைக்குழுவினர் கிளம்பிவிட்டனர். ஆனால், அன்று முழுவதும் இளையராஜாவிற்கு கடும் காய்ச்சலாக இருந்திருக்கிறது.

அப்போது ஜி.கே.வெங்கடேஷ், மூகாம்பிகை கோயிலுக்கு இளையராஜாவை அழைத்திருக்கிறார். ஆரம்பித்தில் கோயிலுக்கு வர மறுத்த இளையராஜா, ஒருகட்டத்தில் சரி, மூகாம்பிகையை தரிசிக்கலாம் என்று மனதில் முடிவெடுத்தவுடன் காய்ச்சல் நின்றிருக்கிறது.

மூகாம்பிகை தன்னை சோதிப்பதாக நினைத்து அன்று கோயிலுக்குச் சென்றிருக்கிறார்.

கோயிலுக்குச் செல்லும்போது, கோயிலினுள் நுழைந்தவுடன் ஒரு மின்னல் என் இதயத்தில் பாய்ந்ததாகக் கூறுகிறார்.

அந்த உணர்வு என்னவென்று மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்க, அதிலிருந்து முழுமையாக தன்னை அர்ப்பணித்து மூகாம்பிகையின் பக்தனாக மாறிவிட்டார் இளையராஜா.

இளையராஜா ஸ்டியோவில் இருக்கும் மூகாம்பிகை படம்

தனது இசைப் பயணத்தின் தேடலைப் போல, இளையராஜாவிற்கு இந்த ஆன்மீகத் தேடலும் மூகாம்பிகை அம்மன் மூலம் ஆரம்பித்திருக்கிறது.

இன்று அவரது ஸ்டுடியோவில் மூகாம்பிகையின் படத்தின் அருகே அமர்ந்தபடிதான் உட்கார்ந்திருப்பார் இளையராஜா.

எங்கு சென்றாலும் தன் அம்மாவிடம் 'போயிட்டு வரேன்' என்று சொல்லிவிட்டு போவதைப் போல ஸ்டுடியோவில் இருக்கும் மூகாம்பிகையின் படத்தைப் பார்த்து சொல்லிவிட்டுதான் எங்கும் செல்கிறாராம் இளையராஜா.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vadivelu: ``மக்கள்தான் கடவுள்; உங்க வாழ்த்து என்னைக்கும் வேணும்'' - பிறந்தநாளில் வடிவேலு நெகிழ்ச்சி

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் வடிவேலு, நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.இன்று (செப். 12) தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் வாழ்... மேலும் பார்க்க

``9 பேர் மட்டும் வைத்து அட்வன்சர் படம், பகத் பாசில், ஹீரோயின் இல்லாமலே காதல் கதை'' - பிரேம்குமார்

இயக்குநர் பிரேம் குமாரின் ‘96’ திரைப்படம் அனைவரையும் கவர்ந்து மனதில் நின்றது. கதை, திரைக்கதை, வசனம், பின்னணி இசை, பாடல்கள், நடிப்பு என அனைத்துமே சிறப்பாக அமைந்திருந்தது.இதையடுத்து ‘மெய்யழகன்’ திரைப்பட... மேலும் பார்க்க

``எனது முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றி இருக்கிறேன்; முதல் ஆசிரியர் இவர்தான்'' - ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் தற்போது ‘பென்ஸ்’, ‘ஹண்டர்’, ‘புல்லட்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.மேலும் ‘காஞ்சனா 4’ படத்தில் நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கவும் இருக்கிறார்.திரைத்துறையைத் தாண்டி தனது அறக்கட்டளையின்... மேலும் பார்க்க

Shakthi Thirumagan: ``இரண்டாவது பாதி படம் எனக்கு புரியவே இல்லை" - ஓப்பனாக பேசிய விஜய் ஆண்டனி

தமிழ் திரையுலகில் இன்று பலரும் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களில் வெகுசிலர் மட்டுமே அதில் வெற்றி கண்டுள்ளனர். அவர்களில் மிகவும் பிரபலமானவர் விஜய் ஆண... மேலும் பார்க்க