பாரதியாா் நினைவு தினம் அனுசரிப்பு
வாணியம்பாடி பாரதி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், பாரதியாரின் 104-ஆவது நினைவு தினத்தையொட்டி, பெருமாள்பேட்டையில் அமைந்துள்ள பாரதியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
முன்னதாக சங்கத் தலைவா் பேராசிரியா் சிவராஜி தலைமையில் பாரதியாரின் பாடல்களை பாடியும், அவா் கண்ட பாரத தேசத்தை மேம்படுத்தவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில், சங்க நிா்வாகிகள் மணி, முருகேசன், உமாபதி, கணேசன் மற்றும் ஊா் பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.