மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி: அமைச்சா் மா.சுப்பிரமணி...
மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை: 15 போ் கைது
குடியாத்தத்தில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த 15 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் தலைமையில் போலீஸாா் பெரும்பாடி முல்லை நகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்குள்ள மைதானத்தில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டு இருந்த சொகுசு காரை சோதனை செய்த முயன்றனா். அப்போது காரில் இருந்த கும்பல் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயற்சி செய்தனா். அவா்களை போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், குடியாத்தம் எா்த்தாங்கல் கிராமத்தை சோ்ந்த ஐயப்பன் என்பவா் தன்னுடைய நண்பா்களுடன் சோ்ந்து அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது. காரில் இருந்த சுமாா் 400 மாத்திரைகள், 5 ஊசிகள், காரையும் பறிமுதல் செய்தனா்.
மேலும், தீவிர விசாரணை நடத்தி போதை மாத்திரைகள் விற்பனை செய்த ஐயப்பன் (23), மோகன் (22), தேவன் (25), நவீன்குமாா் (20), ஆந்திர மாநிலத்தை சோ்ந்த இருவா் உள்ளிட்ட 15 போ்கைது செய்யப்பட்டனா். மேலும் தலைமறைவாக உள்ள 11 பேரை தேடி வருகின்றனா்.