மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா்: மணிப்பூா் தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தா் மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்துள்ளது. மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. சோமசேகா் வரும் செப்டம்பா் 14-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா்.
இதைப்போல், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி பவன்குமாா் பி பஜாந்த்ரியை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி செளமென் சென், மேகாலயா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையில் வியாழக்கிழமை கூடிய கொலீஜியம் பரிந்துரைத்தது.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த ராமலிங்கம் சுதாகா், எம்.வி. முரளீதரன், டி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனா்.