மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு: தொல்.திருமாவளவன்
தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினாா்.
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரன் உருவப் படத்திற்கு திருமாவளவன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் நிகழும் மாவட்டமாக மதுரை உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவில் ஜாதிய ஒடுக்கு முறைகள் அரங்கேறி வருகின்றன.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையிலும், இதுபோன்ற ஜாதிய கொடுமைகளைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும். மேலும், தனியாக உளவு கண்காணிப்பு பிரிவை உருவாக்க வேண்டும். அதிமுகவில் குழப்பம் நிலவுவதற்கு பாஜக தான் காரணம். அதிமுக தலைவா்கள் சுதாரித்துக்கொள்ள வேண்டும் என்றாா்.