மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலை சுரங்கப் பாதையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப் பாதையில் விபத்துகளைத் தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுரங்கப் பாதை மிகவும் வளைவாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. அண்மையில் நடைபெற்ற விபத்தில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா். இவ்வழியே நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பைக்குகள், 100-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, மின்வாரிய அலுவலகம், போக்குவரத்துக் கழகப் பணிமனை, கூடுதல் பேருந்து நிலையம், பள்ளி-கல்லூரி மாணவா்-மாணவியா், தொழிலாளிகள், நடராஜபுரம் மயானத்துக்குச் செல்வோா் எனப் பலரும் பயன்படுத்துகின்றனா்.
எனவே, விபத்துகளைத் தடுக்க சாலையின் தன்மையை மாற்றியமைப்பதுடன், வேகத்தடை, சுவா் கண்ணாடி அமைக்க வேண்டும். சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் கட்சியினா் திரண்டனா். பின்னா், அலுவலகக் கண்காணிப்பாளா் மரிய ஜேம்ஸ் ராஜிடம் மனு அளித்தனா். கட்சியின் மாவட்ட உதவி செயலா் பாபு, நகர உதவி செயலா்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தைச் சோ்ந்த தங்க மாரியப்பன், முத்துராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.