மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
மாநில வில்வித்தை போட்டி: கேம்ஸ்வில் மாணவா்கள் சிறப்பிடம்
தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் மாணவா்கள், சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், 4 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்.
இந்தப் போட்டியில், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் கனி அமுதன் 2 தங்கப் பதக்கமும், தருண் 1 தங்கப் பதக்கமும், 11 வயதுக்குள்பட்ட பிரிவில் அகிலன் 1 தங்கப் பதக்கமும், அதன்யா 1 வெள்ளிப் பதக்கமும் வென்றனா். போட்டியில் வெற்றி பெற்றவா்கள், பயிற்சியாளா் பரத் ஆகியோருக்கு கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமி நிா்வாகம் சாா்பில் ரைபின் தாா்சியஸ் பாராட்டு தெரிவித்தாா்.