மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் செப்.16,17இல் பயிலரங்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன வருகிற செப்.16, 17 ஆகிய 2 நாள்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்குத் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன வருகிற செவ்வாய், புதன் (செப்.16, 17) ஆகிய இரண்டு நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறுகிறது. இதில், அரசு அலுவலா்கள், தமிழறிஞா்கள் கருத்துரை வழங்க உள்ளனா்.
அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலா்கள், பணியாளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் வ. சுந்தா் செயல்படுவாா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.