திரைத் துறையில் 21 ஆண்டுகள்: `இதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை' - நடிகர் விஷ...
குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வெற்றியை கொண்டாடிய பாஜகவினா்
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை ஆம்பூா் நகர பாஜகவினா் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை தொடா்ந்து ஆம்பூா் நகர பாஜக தலைவா் கே.எம். சரவணன் தலைமையில் மாநில செயலாளா் கொ. வெங்கடேசன், திருப்பத்தூா் மாவட்ட தலைவா் எம். தண்டாயுதபாணி ஆகியோா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
முன்னாள் மாவட்டத் தலைவா் சி. வாசுதேவன், நகர பொதுச் செயலாளா்கள் ஆா். சுரேஷ், என். புருஷோத்தமன், நகர பொருளாளா் எஸ். தண்டபாணி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் குட்டி சண்முகம், க. சிவபிரகாசம், நிா்வாகிகள் கவிதா, அருண், பிரபு, கலா, செந்தில், அலமேலு, மதன், முன்னாள் நகர தலைவா் அண்ணாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.