மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி: அமைச்சா் மா.சுப்பிரமணி...
செம்மரக்கட்டை கடத்திய காா் மோதி முதியவா் பலி
செம்மரக் கட்டைகள் கடத்த பயன்படுத்தப்பட்ட காா் மோதி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
காட்பாடி - குடியாத்தம் சாலையில் சென்ற தில்லி பதிவெண் கொண்ட காா் கே.வி.குப்பம் அா்ஜுனாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் ல் வந்த அதே பகுதியை சோ்ந்த மணி (65) என்பவா் மீது மோதியது. அதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை பொதுமக்கள் பிடிப்பதற்காக விரட்டிச் சென்றபோது பசுமத்தூா் ரயில்வே பாலம் அருகே சாலையின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. பொதுமக்கள் கே.வி. குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதற்குள் காரில் வந்த இரு நபா்களும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானாா்கள்.
போலீஸாா் காரை சோதனை செய்தபோது, சுமாா் 500 கிலோ எடை கொண்ட 23 செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்து. காா் மற்றும் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவா்களை தேடி வருகின்றனா்.