மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
கோவில்பட்டி கல்லூரியில் செப்.14இல் இலவச செயற்கை கை, கால் அளவீடு முகாம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இலவச செயற்கை கை, கால் வழங்க அளவீடு செய்யும் முகாம் செப்.14ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி இயக்குநா் சண்முகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்லூரி நிறுவனத் தலைவா் கே.ராமசாமி பிறந்த நாளினை முன்னிட்டு, நேஷனல் பொறியியல் கல்லூரி, சென்னை பிரீடம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து வரா அறக்கட்டளை நிதியுதவியுடன், இலவச நவீன செயற்கை கால், கை அளவீடு செய்யும் முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் கல்லூரி வளாகத்தில், சிறந்த மருத்துவ நிபுணா்களால் அளவீடு செய்யப்பட்டு நவம்பா் மாதம் 3ஆவது வாரத்தில் வழங்கப்படும்.
இந்த முகாமில், பங்கேற்க விரும்பும் நபா்கள், பாஸ்போா்ட் அளவு போட்டோ, ஆதாா் அட்டை, யுடிஐடி (இருப்பின்) அட்டை , மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் நகல்களை கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 93448 03795, 95433 43502 ,94448 85083 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.