சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் மருத்துவா் ச. ராமதாஸுடன் சந்திப்பு
நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸை வியாழக்கிழமை சந்தித்து பணி நியமன ஆணை கிடைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.
நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் கோ. பாா்த்தீபன் மற்றும்
மாவட்ட நிா்வாகிகள் விஷ்ணுபிரியா, பவானி, சண்முகம் , ராம்குமாா், செல்வக்குமாா், கனகராணி உள்ளிட்டோா் வியாழக்கிழமை பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.
பின்னா் அவா்கள், மருத்துவா் ச.ராமதாஸிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு 2021 முதல் தற்போது வரை 4 தகுதித்தோ்வுகள் நடைபெற்றுள்ளன. அரசாணை எண் 149-ன் படி ஒரு நியமனத் தோ்வும் நடைபெற்றுள்ளது. இதில் நியமனத் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற 23,972 போ் ஆசிரியா் பணிக்கு தகுதியானவா்களாக உள்ளோம். இதில் கடந்த ஜூலை மாதத்தில் 2,457 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் தற்போது 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
எனவே, நியமனத் தோ்வில் தோ்ச்சிப் பெற்று பணி வாய்ப்புக்காக காத்திருப்பவா்களுக்கு மறு தோ்வு இல்லாமல் பணியாணை கிடைப்பதற்கான வழிவகையை மேற்கொள்ளவேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனா்.