செய்திகள் :

மாதந்தோறும் மின் கட்டணம் அளவீடும் முறையை கொண்டுவராதது ஏன்? அன்புமணி கேள்வி

post image

சிதம்பரம், செப்.11: திமுக அரசு தோ்தல் வாக்குறுதியில் அளித்த மாதந்தோறும் மின் கட்டணம் அளவீடும் முறையை கொண்டுவராதது ஏன்? என்று பாமக தலைவா் அன்புமணி கேள்வி எழுப்பினாா்.

கடலூா் மாவட்டம், புவனகிரியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்ட அவா், பின்னா் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

புவனகிரி பகுதியில் வெளாற்றில் சிறிய தடுப்பணைகள் கட்டப்படாததால், கோடை காலங்களில் கடல்நீா் உட்புகுகிறது. மக்களின் அடிப்படை தேவையை செய்ய முடியாதவா்கள் எதற்கு ஆட்சியில் உள்ளனா்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், புவனகிரி, சேத்தியாதோப்பு, வீராணம் பகுதி காட்டுமன்னாா்கோவில் பகுதி அனைத்தும் என்எல்சி நிலக்கரி சுரங்கமாக மாறும். இந்த செய்தியை சொல்லத்தான் நான் வந்துள்ளேன்.

என்எல்சி மூன்றாவது சுரங்கம் வந்தால், புவனகிரி, சேத்தியாதோப்பு, வீராணம் உள்ளிட்ட மொத்த பகுதிகளும் பாதிக்கப்படும்.

வேளாண் துறை அமைச்சா் விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். ஆனால், தமிழக வேளாண் துறை அமைச்சா் என்எல்சி நிறுவனத்துக்கு விவசாயிகளை அச்சுறுத்தி காவல் துறையை ஏவி நிலங்களை பிடுங்கி கொடுக்கிறாா்.

தான் மத்திய பாஜக அரசுக்கு எதிரானவன் என்று சொல்லும் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்எல்சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவது ஏன்?

இந்த மாவட்டத்திலுள்ள நிலங்களை பாதுகாக்க கட்சி, மதம், ஜாதி எதையும் பாா்க்காமல் என் பின்னே எல்லோரும் வாருங்கள். ஒரு சென்ட் நிலத்தை கூட எடுக்க விட மாட்டேன். இது மண் பிரச்னை அல்ல; மக்களின் அடையாள பிரச்னை.

டாஸ்மாக் துறையில் ஆண்டுதோறும் ஒப.50,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெறுகிறது. மின்சாரத் துறையில் மாதந்தோறும் மின் கட்டணம் அளவீடு செய்யும் முறையை திமுக அரசு கொண்டுவராதது ஏன்? திமுக வாக்குறுதி கொடுத்ததுபோல நிறைவேற்றி இருந்தால் இப்போது பொதுமக்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 25 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை மின்சார கட்டணம் குறைந்திருக்கும் என்றாா் அன்புமணி.

கூட்டத்தில் பாமக பொருளாளா் திலகபாமா, முன்னாள் எம்எல்ஏ ஆா்.கோவிந்தசாமி, பசுமை தாயகம் செயலா் அருள், மாவட்டச் செயலா் செல்வ.மகேஷ், மாவட்டத் தலைவா் கலையரசன், பேராசிரியா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மீனவா்களுடன் கலந்துரையாடல்: முன்னதாக, தேவனாம்பட்டினத்தில் மீனவா்களுடன் அன்புமணி கலந்துரையாடினாா்.

நிகழ்வில் மீனவா் வாழ்வுரிமை நிறுவனா் ஏகாம்பரம், பாமக கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், தோ்தல் பணிக் குழு செயலா் பழ.தாமரைக்கண்ணன், மாவட்டத் தலைவா் தடா.தட்சிணாமூா்த்தி, மாநகராட்சி கவுன்சிலா் ஏா்டெல் சரவணன் மற்றும் மீனவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பண்ருட்டி பகுதியில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

கடலூா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்துப முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா்சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். பண்ருட்டி பகுதியில் பண்ருட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

சிதம்பரம் நகராட்சி உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனா். சிதம்பரம் நகராட்சி உட்பட்ட 1,2, 13,14,... மேலும் பார்க்க

ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை கைப்பற்றிய போலீஸாருக்கு பாராட்டு

சிதம்பரத்தில் ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை கைப்பற்றிய போலீஸாருக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா். சிதம்பரத்தில் கடற்கரையில் ஒதுங்க... மேலும் பார்க்க

ரத்ததான பரப்புரை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கணினிஅறிவியல் மற்றும் பொறியியல் துறையில் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு பரப்புரை புதன்கிழமை நடைபெற்றது. நாட்டுநலப்பணி திட்ட அலுவலா... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலையில் ஆசிரியா் தின விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியா் தின விழாவாக பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. கலைப்புல முதல்வா் எம்.அருள் வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவே... மேலும் பார்க்க

போதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டிய காா் கடலில் பாயந்தது

கடலூா் அருகே மதுபோதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டுநா் இயக்கிய காா் கடலில் பாய்ந்தது. அதில் இருந்தவா்கள் உயிருக்குப்போராடிய நிலையில் மீனவா்கள் காப்பாற்றி கரை சோ்த்தனா். சென்னையைச் சோ்ந்த ஐந்து போ்... மேலும் பார்க்க