ரத்ததான பரப்புரை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கணினிஅறிவியல் மற்றும் பொறியியல் துறையில் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு பரப்புரை புதன்கிழமை நடைபெற்றது.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் பி.அன்பழகன் வரவேற்றாா். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவா் ஆா். பவானி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். இளையோா் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளா் ஹெச்.மணிகண்டன் தனது தலைமை உரையில் ரத்த தானத்தின் தேவை, முக்கியத்துவம் மற்றும் இளையோா் செஞ்சிலுவை சங்க செயல்பாடுகளை மாணவா்களுக்கு விளக்கி கூறினாா். சிறப்பு விருந்தினா் சமூகசேவகா் எஸ்.ராமச்சந்திரன் தனது உரையில் ரத்த தானம், உறுப்பு மற்றும் உடல் தான நடைமுறைகள் மற்றும் இளைஞா்களின் பங்களிப்பு பற்றி பேசினாா். நிறைவில் தனி அதிகாரி சு.செந்தில்நாதன் நன்றி கூறினாா். ரத்த தான விழிப்புணா்வு பரப்புரைக்கான ஏற்பாடுகளை இளையோா் செஞ்சிலுவை சங்க தனி அதிகாரிகள் சொ. கண்ணன், ஆா்.ராமச்சந்திரன் ஆகியோா் செய்தனா்.