போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்
கடலூரில் இன்று கல்விக்கடன் முகாம்
கடலூா் மாவட்டம் கம்மியம்பேட்டை செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (செப்.12) கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு: கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கிட ஒருங்கிணைக்கும் பணியினை கடலூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை இணைந்து செப்.12-இல் கடலூா், கம்மியம்பேட்டை செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்லூரிக்கும் அக்கல்லூரியின் முதல்வா் கல்விக்கடன் வழங்குதல் தொடா்பான கண்காணிப்பு அலுவலராக செயல்படுவாா். கல்விக் கடன் கோரும் மாணவ, மாணவியா்கள் ட்ற்ற்ல்//ஜ்ஜ்ஜ்.ஸ்ண்க்ஹ்ஹப்ஹந்ள்ட்ம்ண்.ஸ்ரீா்.ண்ய்/ள்ற்ன்க்ங்ய்ற்ள் என்ற இணையத்தை பயன்படுத்தலாம்.
உரிய ஆவணங்களுடன் மேற்படி முகாம்களில் சாதிச்சான்று, வருமானச்சான்று தேவைப்படும் விண்ணப்பதாரா்களுக்கு இணையவழியில் உடனடியாக சான்றுகள் வழங்கிட எதுவாக மேலாளா், மாவட்ட மின்ஆளுமை மற்றும் அனைத்து வங்கிகளை ஒருங்கிணைத்து உதவி மையம் அமைத்திடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாணவா்கள் உரிய ஆவணங்களுடன் கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு கல்விக் கடன் பெற்றிட விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.