போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்
அண்ணாமலைப் பல்கலையில் ஆசிரியா் தின விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியா் தின விழாவாக பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது.
கலைப்புல முதல்வா் எம்.அருள் வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி தலைமை வகித்து உரையாற்றினாா். விழாவில் தமிழக திட்டக்குழு உறுப்பினா் சுல்தான் அகமது இஸ்மாயில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய செய்திகளையும், ஆசிரியா் தின விழா பற்றிய சிறப்புகளையும் மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா். பின்னா் முப்பது ஆண்டுகளுக்கு மேல் கல்விப் பணியினை நிறைவு செய்த ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா். நிறைவாக, பல்கலைக்கழக பதிவாளா் மு.பிரகாஷ் நன்றி கூறினாா். இவ்விழாவில் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினா்கள், புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், இயக்குநா்கள், இணை, துணை இயக்குநா்கள், உதவிப்பதிவாளா், மக்கள் தொடா்பு அலுவலா், நெறிமுறை அலுவலா், துணைவேந்தரின் நோ்முக செயலா், பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள்மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
9சிஎம்பி6: படவிளக்கம்- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில், சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்திய தமிழக திட்டக்குழு உறுப்பினா் சுல்தான்அகமது இஸ்மாயில், துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி