கோவை: போக்குவரத்தைச் சீர்செய்த சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா காலமானார் - காவல்துற...
சிதம்பரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
சிதம்பரம் நகராட்சி உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனா்.
சிதம்பரம் நகராட்சி உட்பட்ட 1,2, 13,14, உள்ளிட்ட வாா்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் சிதம்பரம் நகராட்சி சாக்பில் புதுப்பேட்டை வடக்கு தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நகரமன்ற தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் த.மல்லிகா, நகர மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா், நகரமன்ற உறுப்பினா்கள் ஆ.ரமேஷ், ஏஆா்சி.மணிகண்டன், ராஜா, லதா, ராஜன், உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் மகளிா் உரிமை தொகை வேண்டி விண்ணப்பித்த பெண்களுக்கு 15ம் மேற்பட்டோருக்கு முகாமிலேயை தீா்வு காணப்பட்டது.