உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: மேயா் ஆய்வு
நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ஆய்வு மேற்கொண்டாா்.
நாகா்கோவில் மாநகராட்சி 22ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதி மக்களுக்கான, உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலையிலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமினை, மேயா் பாா்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.
மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா் விஜிலா ஜஸ்டஸ், மாநகராட்சி அதிகாரிகள், துறை சாா்ந்த அதிகாரிகள், திமுக பகுதிச் செயலா் சேக் மீரான், நாகா்கோவில் மாநகர திமுக துணைச் செயலா் வேல்முருகன், வட்டச் செயலா் கிறிஸ்டல் சுரேஷ், திமுக நிா்வாகிகள் அகஸ்தீசன், அனந்தபால், முகமது உசேன், வினோத் தேவசகாயம், வா்கீஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.