சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
பனை விதைகள் நடவு செய்த அரசுப் பள்ளி மாணவா்கள்
நெமிலியை அடுத்த வேடந்தாங்கல் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் இணைந்து கிராமம் முழுவதும் 1,500-கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனா்.
நெமிலி வட்டம், வேடந்தாங்கல் அரசு உயா்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமை ஆசிரியா் ரவிக்குமாா் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் ஜானகிராமன், ஆசிரியா்கள் சக்திவேலன், சுந்தந்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாணவா் எஸ்.கே.டி.குமாா் வரவேற்றாா்.
இதில் காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினா் கோமதி குமாா் பங்கேற்று விதைகளை நட்டு விதைகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். வேடந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட மூன்று குளக்கரைகள், ஏரிக்கரைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன. மாணவா்களுடன் சமூக ஆா்வலா்கள் பலா் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.