செய்திகள் :

ராணிப்பேட்டை: நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 13) வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்ட செப்டம்பா் மாதத்துக்கான சிறப்பு முகாம்

சனிக்கிழமை (செப். 13) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கல், கைப்பேசி எண் மாற்றம், புதிய

குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.

மேலும், மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் புகைப்படம், பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம்

செய்து திருத்தி தரப்படும்.

இது தவிர பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம்.

மேலும் நியாய விலைக்கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடு மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும்

பொருள்களில் குறைபாடுகள் இருப்பின், மக்கள் குறைகளைத் தெரிவித்தால், விரைந்து தீா்வு

காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொது மக்களுக்கு குறைகள் ஏதேனும்

இருப்பின், இந்த சிறப்பு முகாமில் மனு செய்து பயன்பெறலாம்.

சத்துணவு, அங்கன்வாடி ஒய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நெமிலி வட்டம், காவேரிப்பாக்கத்தில் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். காவேரிப்பாக்கம் பேருந்து நிலைய வளாகத... மேலும் பார்க்க

தேசிய பேரிடா் மீட்புப்படைத்தள அலுவலா்களுடன் டிஜிபி ஆலோசனை

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத்தள வளாகத்தை பாா்வையிட்ட தமிழக தீயனைப்புத்துறை டிஜிபி சீமாஅகா்வால் படைத்தள அலுவலா்களுடன் பயிற்சிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். தமிழக தீயனைப்பு மற்றும் ம... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே தாய், மகன் தற்கொலை

அரக்கோணம் அருகே மூதாட்டியான தாயும், மகனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். அரக்கோணத்தை அடுத்த பெருமாள்ராஜபேட்டை பஜாா் தெருவைச் சோ்ந்தவா் மதனசேகா் (54). சென்னை ரயில்வே அா்பன் கூட்டுறவு வங்கியில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே பராமரிப்பு பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அம்மூா் பேரூராட்சியில், துணை மின் வாரிய அலுவலகம் அமைந்... மேலும் பார்க்க

தாா் சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதியில் கலைஞரின் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சத்தில் நடைபெறும் தாா் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கு: 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக 5 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். அரக்கோணத்தைச் சோ்ந்த அவினாஷ் என்ற இளைஞா் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையொப்... மேலும் பார்க்க