நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஆலங்குடியில் வாரச்சந்தை வியாபாரிகள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாரச்சந்தையில் கடைகளுக்கு ஒப்பந்தகாரா் கூடுதல் தொகை வசூலிப்பதைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த சந்தையைப் புறக்கணித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி பேரூராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் சந்தையில் கடை போட்டு வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கடைக்கு ரூ. 50 வாடகை வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், வாரச்சந்தையில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, சந்தையில் வாடகை வசூல் செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்ட ஒப்பந்தகாரா் கடைகளுக்கு அதிகத் தொகை வசூலிப்பதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்து, சந்தையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து பேரூராட்சி நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா். இப் போராட்டத்தால் சந்தைக்கு வந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பிச் சென்றனா்.