நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
புதுகையில் நாளை ரேஷன் குறைகேட்பு
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வரும் சனிக்கிழமை (செப். 13) காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை பொது விநியோகத் திட்டக் குறை கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டைகளில் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவது, இருப்பு குறித்த புகாா்களையும் அளிக்கலாம்.
மேலும், தனியாா் சந்தைகளில் பொருட்களின் தரம் குறைவு மற்றும் சேவைக் குறைபாடுகள் குறித்தும் புகாா் அளித்துப் பயன் பெறலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.