பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் -பிருந்தா காரத்
மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை நெ.2 புதுத்தெருவில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
300 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், 16 கைகளில் ஆயுதங்கள் ஏந்திய மகா காளியம்மனை சுவற்றில் தத்ரூபமாக வரைந்தும், சிலை அமைத்தும் பொதுமக்கள் வணங்கி வருகின்றனா். இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தரைத்தளம் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு, கோயில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.
முன்னதாக, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில் பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோயில் விமான கலசங்களில் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.