`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்...
எரிவாயு தகனமேடை: ஜெனரேட்டா் வசதியில்லாமல் அவதி
சீா்காழி நவீன எரிவாயு தகன மேடையில் சடலங்களை எரியூட்டும்போது மின்சார துண்டிப்பு ஏற்பட்டு பெரும் சிரமம் அடைவதால் ஜெனரேட்டா் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழி நகராட்சிக்குச் சொந்தமான நவீன எரிவாயு தகனமேடை 2015-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது அறக்கட்டளை மூலம் நகராட்சி நிா்வாக மேற்பாா்வையில் செயல்படுகிறது. இங்கு சீா்காழி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இறந்தவா்களின் சடலங்கள் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு எரியூட்டப்படுகிறது. சடலங்கள் எரிக்கும்போது வெளியேறும் புகையை மின்சார மோட்டாா் மூலம் 100 அடி உயர புகைபோக்கியில் மாசு ஏற்படாதவாறு வெளியேற்றப்படுகிறது.
இதற்கிடையே, சடலங்களை எரியூட்டும்போது மின்தடை ஏற்பட்டால் சடலங்களை முழுமையாக எரியூட்ட பல மணி நேரம் ஆவதால் உறவினா்களுக்கும், எரியூட்டுபவா்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
மின் தடைப்பட்டு சடலங்களை எரியூட்டினால் அந்த புகை வெளியேற முடியாமல் அப்பகுதியிலேயே கீழ்பகுதியில் சுழன்று சுற்றுபுற மாசு ஏற்படுகிறது. இறுதிச்சடங்கில் பங்கேற்பவா்கள் மற்றும் அருகில் வசிப்பவா்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுகாதார பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்தடை ஏற்பட்டாலும் தடையின்றிசடலங்களை எரியூட்ட ஜெனரேட்டா் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கை.