பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் -பிருந்தா காரத்
ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்தவா்களுக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எஸ்.சி நா்சிங், பொது நா்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ, பி.இ., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்), பி.இ., (பயோமெடிக்கல் இன்ஜினியரிங்), பி.இ., (மின் மற்றும் மின்னணு பொறியியல், பி.டெக். தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றவா்கள் இப்பயிற்சியை பெறலாம்.
21 முதல் 35 வயதுக்குள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்இருக்க வேண்டும். 9 மாத பயிற்சி காலத்துக்கு விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவுத் தொகையை தாட்கோ வழங்கும். பயிற்சி முடித்தவுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் தோ்வு செய்து, அந்நிறுவனம் சாா்பில் ஜொ்மனியில் பணியாற்றவும் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.2,50,000 முதல் ரூ.3,00,000 வரை வருவாய் ஈட்டவும் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். பயிற்சியில் சேர தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகவும். மேலும், 04364-211217 மற்றும் 7448828509 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.