பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் -பிருந்தா காரத்
புத்தூரில் நாளை மருத்துவ முகாம்
புத்தூரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மருத்துவ முகாமில் பங்கேற்க மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ஏ.வெங்கடேசன் தொழிலாளா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தி: கொள்ளிடம் ஒன்றியம் புத்தூா் எஸ்எஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளது.
பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதில், தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள், சுமைதூக்கும் பணியாளா்கள், புத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த தொழிலாளா்கள், ஓய்வூதியா்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.