சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!
சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி யுஎஇ அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி மீண்டும் இந்தியாவுடன் சூப்பர் 4 சுற்றில் விளையாட இருக்கிறது.
நேற்றிரவு துபையில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146/9 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய யுஎஇ அணி 17.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக பாகிஸ்தான் ஃபகர் ஸமான் 50 ரன்களும் யுஎஇ சார்பில் சோப்ரா 35 ரன்களும் எடுத்தார்கள்.
பாகிஸ்தான் வீரர் ஷாகீன் ஷா அஃப்ரிடி பேட்டிங்கில் 29 ரன்கள், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியதால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.
ஏற்கெனவே, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எதிரணியினருடன் கைக் குலுக்காமல் நடந்துகொண்டது விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் செப்.21ஆம் தேதி மோதவிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்திய அணி தனது கடைசி லீக் சுற்றில் நாளை (செப்.19) ஓமனுடன் விளையாடுகிறது.