``செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின்'' - வீடியோ காண்பித்த எடப்...
குஷி மறுவெளியீட்டு டிரைலர்..! எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!
நடிகர் விஜய், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவான குஷி திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது.
இந்த டிரைலரை படத்தின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000-இல் வெளியாகிய குஷி திரைப்படம் அன்றைய காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிட்டிருந்தது.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை மீண்டும் மறுவெளியீடு செய்கிறது. கில்லி வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இதன் மறுவெளியீட்டு டிரைலரை வெளியிட்டு எஸ்.ஜே.சூர்யா, “மீண்டும் தளபதி விஜய். குஷி மீண்டும் வருகிறது. செப்.25ஆம் தேதி மீண்டும் கலக்குகிறோம். தளபதி விஜய்யைக் கொண்டாடுவோம். ஜோதிகா, ஏஎம் ரத்னம், தேவா, அமரர் ஜீவா, விவேக் மற்றும் படக்குழுவுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.