SSVM டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் மாநாடு கருத்தரங்குகள். கலாச்சார நிகழ்வ...
அதிமுக அமித்ஷாவின் அடிமையாகிவிட்டது: அமைச்சர் சேகர்பாபு
அதிமுக அமித்ஷாவின் அடிமையாகிவிட்டது என தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, கரூர் முப்பெரும் விழா அரசியல் களத்தில் திமுகவை விமர்சித்தவர்களும் வாழ்த்தும் வகையில் அமைந்துள்ளது என்று கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பா, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
சென்னை மாநகராட்சி மண்டலம்-5க்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம்,
வால்டாக்ஸ் சாலையில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகள், மற்றும் ஏழுகிணறு, குலோப் திருமண மணடபம் அருகில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதல்வரின் எண்ணங்களுக்கு வண்ணமளிக்கும் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை ஆய்வு கொண்டதாகவும், ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு 700 பேர் அமறும் வகையில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் நவம்பர் மாதம் தொடங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ஒவ்வொரு முறை தில்லி பயணம் குறித்து வெளிப்படை தன்மை இல்லாமல் செல்கிறார் என்றும் அதிமுகவை அமித்ஷாவின் அடிமையாக்கிவிட்டார் என பதிலளித்தார்.
மேலும், கரூர் முப்பெரும் விழா அரசியல் களத்தில் திமுகவை விமர்சித்தவர்களும் வாழ்த்தும் வகையில் அமைந்ததாக கூறினார்.