செய்திகள் :

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

post image

சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ராமகிருஷ்ணா வீடு, அலுவலகங்களில் வியாழக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று சென்னை செளகார்பேட்டையில் தங்க நகை வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் மோகன்லால் காத்ரியின் புரசைவாக்கம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் தேதி சென்னையில் வேளச்சேரி, மேற்கு மாம்பலம் மற்றும் அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

Enforcement officers have been conducting raids in the Purasaivakkam area of ​​Saidapet, Chennai since Thursday morning.

புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் குண்டுகட்டாக வெளியேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் , சுயேச்சை உறுப்பினர்கள் வியாழக்கிழமை குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.புதுவை சட்டப் பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வியாழக்கிழம... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே சற்று ஏற்ற, இறக்கமாக ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் வியாழக்கிழமை அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஐந்து பேரை காணவில்லை. கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான கோகைன் எனப்படும் போதைப் பொருளை சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக கென்யா நாட்டைச... மேலும் பார்க்க

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

மும்பை: மும்பையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் நான்கு வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் நிலையில், பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.திங்கள்கிழமை கு... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 8,342 கனஅடியாகக் குறைந்தது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால் கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறை... மேலும் பார்க்க