Rhythm: "தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம்"- வைரமுத...
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 8,342 கனஅடியாகக் குறைந்தது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால் கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 8,641 கனஅடியிலிருந்து வினாடிக்கு 8,342 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்டம் மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 119.18 அடியிலிருந்து 118.75 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 91.49 டிஎம்சியாக உள்ளது.